160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாகந்துரே மதுஸூடன் தொடர்புகளைப் பேணிய எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாகந்துரே மதுஸ் என்பவர் இலங்கையில் மிகவும் தேடப்பட்டு வரும் ஓர் பாதாள உலகக்குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் கொலைகளுடன் மதூஸிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மதூஸ் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்த நிலையில் மதூஸூடன் தொடர்பு பேணிய எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டன மீட்கப்பட்டுள்ளன.
Spread the love