இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த நெல்லை கோடீஸ்வரர் ஒருவர் ஆதார் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். ரேபரேலி மாவட்டத்தில் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டு திரிந்துள்ள நிலையில் கிடைத்த உணவை சாப்பிட்டுவிட்டு கிடைத்த இடத்தில் தங்கி பொழுதை கழித்து வந்தார்.
அவருக்கு அடிக்கடி நினைவு மறதியும் இருந்ததால் அவர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டநிலையில் உத்தரபிரதேசத்தில் ஆசிரமம ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவரது உடைமைகளை ஆராய்ந்தபோது அவருடைய ஆதார் அட்டை காணப்பட்டுள்ளதுடன் வங்கியில் அவரது கணக்கில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக தொகை இருந்ததற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து அந்த முதியவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கோடீஸ்வரர் என்பது உறுதி செய்யப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டது. குடும்பத்தினருடன் புகையிரதத்தில் பயணம் செய்த போது குறித்த முதியவர் காணமல் போய் விட்டதாகவும் தாம் 6 மாதமாக அவரைத் தேடி வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.