175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் பலவந்தமான அடிப்படையில் நாடு கடத்தப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டனத்தை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கை தொடர்பில் எவ்வித பரிசீலனையும் செய்யாது குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்நாட்டில் சித்திரவதைகளுக்கு இலக்காகக்கூடும் என்ற நிலையில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் பலவந்தமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love