154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக இவ்வாறு தலைமப் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
அவ்வாறு வழங்கப்பட்டால் சுதந்திரக் கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love