குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கத் தூதரகத்தில் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேத்தை பிரகடனம் செய்வதாக அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டம்ராம்ப் அறிவித்திருந்தார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டமொன்றின் போது அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மகஜரில் கையொப்பமிட்டுள்ளனர். இந்த மகஜகர் எதிர்வரும் மாதம் அமெரிக்கத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலர் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.