இலங்கை பிரதான செய்திகள்

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஜனாதிபதி குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென ஒட்டுமொத்த நாடே கோரி வரும் நிலையில், ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கு தாமதிக்கக் கூடிய சாத்தியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் ஒழுக்க விதிகளை முழு அளவில் பின்பற்றுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.