குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழு அளவில் நிறைவேற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க பெல்ஜியத்தின் பிரசல்லஸிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியமே இலங்கையின் தனிப்பட்ட வர்த்தக பங்குதாரர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டமை இலங்கைக்கு பாரியளவில் நலன்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை மிக வலுவான தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.