இந்தியா பிரதான செய்திகள்

இந்தியாவின் ராஜஸ்தானில் ஆற்றுக்குள் கவிழ்ந்தது பேருந்து – 27 பேர் பலி..

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் லால்கோட் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து துபி என்ற இடத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையிழனால் பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றிற்குள் விழுந்துள்ளதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த காவல்துறையினர் ; மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதுடன் பேருந்தினை ; கயிறு கட்டி பொக்லைன் இயந்திரம் ந்திரம் மூலம் வெளியே இழுத்தனர்.

இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சிலர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.