குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜப்பானின் நட்சத்திர டென்னிஸ் வீரர் நிஸிகோரி (Nishikori) உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக பிரிஸ்பன் சர்வதேச டென்னிஸ் போட்டித் தொடரில் நிஸிகோரி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. முழங் கையில் ஏற்பட்ட உபாதையினால் நிஸிகோரி பாதிக்கப்பட்டுள்ளார். 27 வயதான நிஸிகோரி உலக டென்னிஸ் தர வரிசையில் ஒன்பதாம் நிலையை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிஸ்பன் போட்டித் தொடரில் பங்கேற்க முடியாமை பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக நிஸிகோரி தெரிவித்துள்ளார். பிரிஸ்பன் சர்வதேச போட்டித் தொடர் எதிர்வரும் 31ம் திகதி முதல் ஜனவரி மாதம் 7ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.