ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 86474 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இடைத்தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெறும் சுயேச்சை வேட்பாளர் என்ற சாதனை படைத்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக, தினகரன் அணி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.
பணப்ப கொடுக்கல் குறித்த முறைப்பாடுகளும் நிலையில் இதன் வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் இன்று நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஆர்கே நகருக்கு மொத்தம் 4 தபால் வாக்குகள் உள்ள நிலையில் ஒரு தபால் வாக்கு மட்டுமே பதிவானது. அதில் திமுகவே வெற்றி பெற்றது. வாக்கு பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் அதிமுக 47118 வாக்குகளும், திமுக 24075 வாக்குகளும், தினகரன் 86474 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் தினகரன் வெற்றி பெற்றுள்ளார். கலைகோட்டுதயம் 3645 வாக்குகளையும் பாஜகவின் கரு நாகராஜன் 1236 வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளனர். இது 18-ஆவது சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகளாகும். மீதமுள்ள வாக்கு பதிவு இயந்திரங்களில் ஒரு வாக்கைக் கூட தினகரன் பெறாவிட்டாலும் அவர்தான் வெற்றி பெறுவார். இதன் மூலம் இடைத்தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற சுயேச்சை என்ற சாதனையை தினகரன் நிலைநாட்டியுள்ளார்.
8ஆம் இணைப்பு- ஆர்.கே நகர் தேர்தல் – 68,392 வாக்குகள் பெற்று டி.டி.வி தினகரன் முன்னிலையில்…
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 4வது சுற்று முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் 53.16% வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக 25.33% வாக்குகளும், திமுக 13.18% வாக்குகளும் பெற்றுள்ளனர். முதல் சுற்றில் இருந்து 4வது சுற்றுவரை டிடிவி தினகரனே முதலிடத்தில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிககள் திகைப்படைந்துள்ளன. வாக்கு எண்ணிக்கையில் மதுசூதனனைவிட இரண்டு மடங்கு அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் தினகரன் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சுயேட்சையாக களம் இறங்கிய தினகரனின் வெற்றி உறுதியாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் – முதல் சுற்றில் – டி.டி.வி தினகரன் முன்னிலையில்…
ஆர்.கே நகர் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதல் இடம்பெறும் வாக்கு எண்ணும் பணிககளின்படி முதல் சுற்றில் – டி.டி.வி தினகரன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ந்திகதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும்.
பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் அமைதியான முறையில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. அதன்படி வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள்….
டி.டி.வி தினகரன்-5,339
அ.தி.மு.க-2738
தி.மு.க-1182
நாம் தமிழர்-258
நோட்டா-122
பா.ஜ.க-66
சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.