புதுக்குடியிருப்பு கள்ளியடி பேராறு பகுதியில் நீராடுவதற்காக சென்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
இந்த சோக சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. கள்ளியடி வயல் பகுதியில் பேராற்றில் நீராடுவதற்க்காக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் ஏழு மாணவர்கள் சென்றுள்ளனர். ஆற்றில் நீராடி கொண்டிருந்த சமயம் பயிர் செய்கைக்காக வெட்ட பட்ட குன்று ஒன்றில் அகப்பட்டு இரண்டுபேர் மூழ்கி பலியாகியுள்ளனர்.
அதனை தொடர்ந்து உடன்சென்ற நண்பர்களால் ஏனையவர்களுக்கு தகவல் வழங்கபட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு மக்கள் இணைந்து சில மணி நேர போராட்ட்ங்களுக்கு பின்னர் இருவரின் உடலங்களை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் (2019) வணிக பிரிவில் கல்வி கற்கும் புதுக்குடியிருப்பு சிவநகரை சேர்ந்த 17 வயதுடைய தவராசசிங்கம் தனுசன், 2019 உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் 17 வயதுடைய சிவராசா பகீரதன் ஆகிய இரண்டு மாணவர்களே நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
சடலங்கள் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் பகீரதன் என்னும் மாணவர் கடந்த வருடம் இடம்பெற்ற க பொ த சாதாரண பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மிகவும் திறமையான மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று கடந்த தீபாவளி நாள் அன்று முல்லைத்தீவு கடலில் மூழ்கி இரண்டு உயர்தர பிரிவு மாணவர்கள் பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.