குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளார். இந்ததவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பினை விரைவில் மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து இவ்வாறு மஹிந்த தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள உள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கில் அவர் இவ்வாறு தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள உள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 2ம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் பொதுஜன முன்னணியின் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் போது மஹிந்த ராஜபக்ச பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பினை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட பொதுஜன முன்னணி பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.