இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

உலகின் மிகச் சிறந்த விக்கட் காப்பாளர் மகேந்திரசிங் தோணி – பிரசாத்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் மிகச் சிறந்த விக்கட் காப்பாளர் மகேந்திர சிங் தோணியாவார் என இந்திய தெரிவுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டித் தொடர் ஆரம்பமாக இன்னமும் 18 மாதங்கள் உள்ள நிலையில் பிரசாத் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இன்னமும் உலகின் முதனிலை விக்கட் காப்பாளராக தோணி திகழ்கின்றார் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதன்படி, மகேந்திர சிங் தோணி எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடுவது உறுதியாக்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலங்களாக தோணியின் துடுப்பாட்டம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்த போதிலும் மீளவும், அண்மைய போட்டிகளில் தோணி வெளிப்படுத்திய திறமையினால் பலரும் அவரை புகழந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link