குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தை தேடும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. விஸ்மடு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தை எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முல்லைத்தீவு நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சில நாட்களுக்கு முன்னதாக சிலர் இந்த இடத்தில் தோண்டி தங்கத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் குறித்த பகுதியில் தேடுதல் நடத்துமாறு உத்தரவிட்டிருந்தது. நீதவானின் எதிரில் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எந்தவொரு சந்தேகத்திற்கு இடமான பொருட்களும் மீட்கப்படவில்லை.