அமெரிக்காவுக்குள் எகிப்து. ஈரான், ஈராக், லிபியா உள்ளிட்ட 11 நாடுகளின் அகதிகள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து அமெரிக்கா சீட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு 120 நாட்கள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட போதும் அதன்பின்னரும் அந்த தடை உத்தரவு முழுமையாக நீக்கப்படவில்லை.
இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் சீட்டில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதும் ஏற்க மறுத்த நீதிபதி 11 நாடுகளின் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார். அரசின் இத்தகைய முடிவு ஒருதலைபட்சமானது என நீதிபதி ரொபேர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.