304
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
80 வீதமான போலி முகநூல் கணக்குகள் முடக்கப்படும் கணனி அவசர பதிலளிக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள போலி முகநூல் கணக்குகள் முடக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வரையில் 3400 முகநூல் தொடர்பிலான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் உண்மையான கணக்கு உரிமையாளர்கள் செய்த முறைப்பாடுகளுக்கு அமைய இவ்வாறு கணக்குகள் முடக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் மோசடிகள், அச்சுறுத்தல்களுடன் தொடர்புடைய முகநூல் கணக்குகள் பல முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love