தீவிரவாதிகள் மற்றும் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு சாதகமான பிட் கொயின் வர்த்தகத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிட் கொயின் என்பது இது ஒரு டிஜிட்டல் கரன்ஸி. இந்த பணத்தை கண்களால் பார்க்க முடியாது. இணைய வர்த்தகம் மூலம் அனைத்து இடங்களுக்கும் அனுப்பவும், பெறவும் முடியும். அனுப்பியதும், பெற்றதும் யார் என்று யாருக்கும் தெரியாத நிலையில் உலகில் எங்கு இருப்பவர்களும் நொடிப் பொழுதில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
கடந்த 2009-ல் இருந்து பயன்பாட்டில் இருக்கும் ஒரு பிட் கொயினின் அதிகமானோர் முதலீடு செய்வதால் இதன் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்தியாவில் 25 லட்சம் பேர் பிட்கொயினில் முதலீடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிட் கொயினுக்கான சட்ட விதிமுறைகளை டிராய் மற்றும் ரிசர்வ் வங்கி இதுவரை வகுக்கவில்லை. இதனை சாதகமாக்கி கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பிட்கொயினில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் கறுப்பு பணம் முதலீட்டாளர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் உதவும் வகையில் பிட் கொயின் வர்த்தகம் உள்ளது எனவும் இதை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பிட் கொயின் வர்த்தகம் நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதை உணர்ந்து ரஷ்யா, அர்ஜெண்டினா மற்றும் சில நாடுகள் இதை தடை செய்துள்ளதனைப் போல் இந்தியாவிலும் தடைசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது