Home இலங்கைபொதுஜன முன்னணி 44 இடங்களில் கூட்டங்களை நடத்த உள்ளது

பொதுஜன முன்னணி 44 இடங்களில் கூட்டங்களை நடத்த உள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 44 இடங்களில் கூட்டங்களை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து பொதுஜன முன்னணி சுமார் 44 இடங்களில் பிரதான கூட்டங்களை நடத்த உள்ளது. இதற்கு மேலதிகமாக 14 ஆயிரத்து 386 மக்கள் சந்திப்புக்கள் நடத்தப்பட உள்ளன.

தேர்தல் மாவட்டமொன்றுக்கு இரண்டு பிரதான கூட்டங்கள் என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடாத்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி திட்டமிட்டுள்ளது. பிரச்சாரக் கூட்டங்களுக்கு மேலதிகமாக கிராம சேவை பிரிவு மட்டத்தில் மக்கள் சந்திப்புக்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More