சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன் தொகைகளை செலுத்த முடியாது இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, இலங்கை சீனாவிடம் ஒப்படைத்துள்ளது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியனவற்றினால் வழங்கப்படும் கடன்களைப் போன்றல்லாது, சீனா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை இலக்கு வைத்து கடனுதவிகளை வழங்கி வருகின்றது. நீண்ட கால அடிப்படையில் கடன் வழங்கு தந்திரோபாய ரீதியிலும் கேந்திர ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்த கடன்களை சீனா வழங்குகின்றது.
உதாரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளை வர்த்தக ரீதியில் இணைக்கும் முக்கியமான ஓர் கடல் மார்க்கமாக காணப்படுகின்றது. நிதி உதவி மற்றும் உட்கட்டுமான வசதிகளை வழங்கி வரும் சீனா, கைமாறாக இயற்கை வளங்களை பெற்றக் கொள்வதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றது.
சமூகப் பொருளாதார பாதிப்புக்கள் அல்லது சுற்றாடல் பாதிப்புக்கள் குறித்து மதிப்பீடு செய்யாது, சந்தை வட்டி அடிப்படையிலேயே சீனா இலங்கைக்கு கடன் வழங்கி வருகின்றது, சலுகை அடிப்படையில் கடன் வழங்கப்படுவதில்லை.
சீனா ஒரே கல்லில் இரண்டு கனிகளை பறிக்கும் வகையில் நாடுகளுக்கு கடன் வழங்கி வருகின்றது. ராஜதந்திர ரீதியில் செல்வாக்கு செலுத்தவும், ஏற்றுமதியை விஸ்தரிக்கவும் இவ்வாறு கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது.
ஹொங்கொங் விவகாரத்தில் சீனாவின் அணுகுமுறைக்கு நிகரான அணுகுமுறையே ஹம்பாந்தோட்டை விவகாரத்தில் பின்பற்றப்படுகின்றது. சீனா இதேவிதமாக பல நாடுகளில் தனது ராஜதந்திர மற்றும் பொருளாதார இலக்குகளை முன்னிலைப்படுத்தி அந்தந்த நாடுகளை கடன் பொறியில் சிக்க வைத்து அதன் ஊடாக நலன் ஈட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
நன்றி : ஏசிய டைம்ஸ்