இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியிலேயே இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் சந்தேகநபர்களிடமிருந்து 15 கைத்தொலைபேசிகள், 2 கணினிகள் மற்றும் ஒரு இலட்சம் இந்திய ரூபாய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
சந்தேகநபர்களின் கைத்தொலைபேசிகளை சோதனை செய்வதற்கும், சூதாட்டத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காகவும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment