குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சியின் செயலாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது. இன்றைய தினம் முற்பகலில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் நாளைய தினம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் துணை ஆணையாளர்களுடன் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் உ ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தேர்தல் சட்டங்கள் தொடர்பில் இந்த சந்தப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் திகதியுடன் அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் முடிவுறுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.