பிரெக்சிற்றை ஓர் மாதிரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் சிக்மார் கெபிரியல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஏனைய நாடுகளுடனும் பிரெக்சிற் மாதிரியிலான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனவும், குறிப்பாக துருக்கி மற்றும் உக்ரேய்ன் ஆகிய நாடுகள் இந்த மாதிரியைக் கொண்டு நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இரு நாடுகளும் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்ளக்கூடிய எந்தவொரு சாத்தியமும் கிடையாது என குறிப்பிட்ட அவர் மாற்று வழிகளில் இந்த நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டு நன்மை அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.