குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்க வீரர் குயின்டன் டி கொக் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தசைப் பிடிப்பு உபாதையினால் இவ்வாறு டி கொக் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியுள்ளாகியதன் காரணமாக நேற்றைய தினம் விக்கட் காப்பிலும் டி கொக் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இன்றைய தினம் ஸ்கான் பரிசோதனைகளை நடத்தி அதன் பின்னரே உபாதையின் தன்மை குறித்து தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்பே அணிக்கு எதிராக தற்போது தென் ஆபிரிக்க அணி டெஸ்;ட் போட்டியில் விளையாடி வருகின்றது. நேற்றைய தினம் தென் ஆபிரிக்க அணி ஒன்பது விக்கட்டுகளை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.