157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
130 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 445 சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது இவ்வாறு 130 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட தரப்பினர் இவ்வாறு போதைப் பொருட்களை மீட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர் இந்த ஆண்டில் போதைப் பொருள் கடத்தல் பயன்பாடு தொடர்பில் இதுவரை 470 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love