குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தல், பாலியலுக்கு தூண்டுதல், சிறுவர் பாலியல் தொடர்பான காணொளிகளை வெளியிடும் 4,694 இணையதள பக்கங்களை முடக்கும்படி, இந்திய மத்திய அரசு ஐ.எஸ்.பி. நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர், மனோஜ் சின்ஹா, நாடாளுமன்றில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல், சிறுவர் பாலியல் தொடர்பான காணொளிகளை வெளியிடும், 4,694 இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளின்படி, 2,133 இணையதளங்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.