176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 1லட்சத்து 63 ஆயிரத்து 104 மாணவ மாணவியர் பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச தகுதியைப பெற்றுக்கொண்டுள்ளனர். நேற்றைய தினம் நள்ளிரவு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்தன.
பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவ மாணவியரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, பரீட்சை பெறுபேறு தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love