பௌத்த உரிமை பெற்றி பேசாது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு எதிராக கண்டனம் வெளியிடுவது நகைப்பிற்குரியது என ஜாகதி ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. பௌத்த உரிமைகள் அழிக்கப்படுவதனை கண்டு கொள்ளாது, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்க கூடாது எனக் கோரி கொழும்பில் ட்ராம்பிற்கு எதிராக போராட்டம் நடத்துவதும் விமர்சனம் செய்வது இலங்கை அரசியலின் நகைப்பிற்குரிய விடயங்களாகும் என கட்சியின் ஊடக செயலாளர் நிசாந்த ஸ்ரீ வர்னசிங்க தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்திற்காக ட்ராம்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் இந்த தரப்பினர், நாகதீப விஹாராதிபதியின் இறுதியைக் கிரியைகளை நடத்தவிடாது எதிர்த்த போதும், திருகோணமலை சம்பூர் சுடாகுடா பௌத்த விஹாரை டோசர் செய்யப்பட்டு நல்லிணக்கத்திற்கு அழிவு ஏற்பட்ட போதும் அமைதி காத்து வந்தனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பௌத்த தொல்பொருட்கள் அழிக்கப்படுவது குறித்து பேசினால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படும் எனக் கூறி பௌத்த உரிமைகளை அடக்குவதற்கு போலியான நல்லிணக்கவாதிகளுக்கு இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.