Home இலங்கைவிஜயதாச ராஜபக்ஸ அரசியல் சாசனப் பேரவையிலிருந்து இராஜினாமா…

விஜயதாச ராஜபக்ஸ அரசியல் சாசனப் பேரவையிலிருந்து இராஜினாமா…

by admin


ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ அரசியல் சாசனப் பேரவையிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். விஜதாச ராஜபக்ஸ தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.

அரசியல் சாசனப் பேரவையில் பத்து பேர் அங்கம் வகித்து வந்தனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கு அமைய விஜயதாச ராஜபக்ஸ இந்தப் பேரவைக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி விஜயதாச ராஜபக்ஸ அரசியல் சாசனப் பேரவைக்கு நியமிக்கப்பட்டிருந்தார். பேரவையின் பதவிக் காலம் எதிர்வரும் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் காண்பபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More