இம்மாதம் 31ம் திகதி அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள, பிரிஸ்பென் சர்வதேச போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக ஸ்பெயினின் அறிவித்துள்ளார். 8 முன்னனி வீரர்கள் மட்டும் பங்குபற்றும் ATP உலக டூர் போட்டியின் இறுதி சுற்றின் போது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இடையில் நடால் வெளியேறியருந்தார். இந்தநிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரிஸ்பென் போட்டியிலிருந்து விலகுவது பற்றி தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பென் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வமாக தான் இருந்த போதிலும் இந்த போட்டிக்கு இன்னும் தான் தயாராகவில்லை எனவும் அதனால் இதில் விளையாட முடியாது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் நடால் கூறியுள்ளார். எனினும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவேன் என நடால் தெரிவித்துள்ளார்