Home இலங்கைகொலன்னாவையில் 10 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் பணிகள் ஆரம்பம்

கொலன்னாவையில் 10 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் பணிகள் ஆரம்பம்

by admin


கொழும்பு கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலை அமைந்துள்ள பகுதியில் மேலும் 10 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் பணிகள் பெற்றோலிய வளத்துறை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவை அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 200மெட்ரிக் தொன் கொள்ளளவுள்ள 3 எண்ணெய் தாங்கிகளும், 11ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் கொள்ளளவு விமான எரிபொருள் தாங்கியொன்றும், 11 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் டீசல் தாங்கியொன்றும், ஐயாயிரத்து 800மெட்ரிக் தொன் டீசல் தாங்கிகள் மூன்றும், மண்ணெண்னை தாங்கியொன்றும், மூவாயிரத்து 800 மெட்ரிக்தொன் டீசல் தாங்கியொன்றும் உருவக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஒருமாதகாலம் மாத்திரமே எண்ணையை களஞ்சியசாலைகளில் வைத்திருக்கமுடியும் எனவும் இத்திட்டத்தின் மூலம் 60 நாட்கள் எண்ணெயை இருப்பில் வைத்துக்கொள்ள முடியும் எனவும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிபொருள் தேவை 90சதவீதம் அதிகரித்துள்ளமையாலேயே இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் எனத் தெரிவித்த அவர் தற்போதைய எண்ணைத்தாங்கிகள் 40 வருடங்கள் பழமையானவையாகும் எனவும் இதனாலேயே மீண்டும் புதிய எண்ணைத்தாங்கிகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல திருமலை எண்ணைத்தாங்கிகளையும் இந்தியாவுடன் சேர்ந்து சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும் என்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More