181
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் இன்று பதவியேற்றுள்ளார். சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார்.
இந்தநிலையில் எதிர்வரும் 8ம் திகதி கூடவுள்ள தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் சுயேட்சை உறுப்பினராக தினகரன் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love