Home சினிமா நடனத்தினை மையப்படுத்திய தொலைக்காட்சி தொடரை இயக்கும் கலா மாஸ்டர்

நடனத்தினை மையப்படுத்திய தொலைக்காட்சி தொடரை இயக்கும் கலா மாஸ்டர்

by admin

நடன இயக்குனர் கலா மாஸ்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் பயணங்களைத் தொடர்ந்து, இப்போ இயக்குநராகப் புது அவதாரம் எடுத்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் தற்பொழுது அவர் புதிதாக ஒரு தொடரை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

கலா மாஸ்டர் கலைஞர் தொலைக்காட்சியில் நடத்திவரும் ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சி நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ள நிலையில் தற்பொழுது கலைஞர் டி.வியிலேயே புதிதாக ஒரு தொடரை இயக்குவதுடன் நிர்வாக தயாரிப்பு வேலைகளையும் அவரே பார்த்து வருவாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமாவில் அல்லது தொலைக்காட்சியில் இயக்குனராக வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் அந்த எண்ணம் இப்போதுதான் நிறைவேறியிருக்கு எனவும் கலா மாஸ்ரர் தெரிவித்துள்ளார். சங்கமம் படம் போல் முற்றுமுழுதாக நடனத்தினை மையப்படுத்தி இதுவரை தொலைக்காட்சி தொடர்களில் வராத கிராமத்துக் கதைக்களம் எனவும் புதுமுகங்களே முழுவதுமாக நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More