வடமாகாணத்தில் உருவாகிய வைத்தியர்களும், பொறியியலாளர்களுமே இன்று தென் பகுதியில் அதிகளவில் கடமையாற்றுகின்றனர். ஆனால் தென் பகுதிகளில் தமிழ் வைத்தியர்கள் கடமையாற்றுவது போல் வடமாகாணத்தில் தமிழ் வைத்தியர்கள் கடமையாற்றாமை மிகவும் வருந்ததக்க விடயம் என ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்
வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் என்ற மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். இந்த மாணவனுக்கு வாழ்த்து தெரிவிக்க ஆளுநர் ரெஜினோலட் குரே இன்று காலை அவரின் வீட்டுக்கு சென்றிருந்தார்
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கோதே ஆளுநர், இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் கல்வி நிலை ஓங்கி காணப்பட்டதாகவும், ஆனால் அந்த நிலைமை சமாதானம் ஏற்பட்ட பின்னர் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் கூறினார்.