குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் நாளையுடன் கலாவதியாகின்றது. இந்த சலுகைத் திட்டத்தை தொடர்ந்தும் வழங்குவதற்கான கால நீடிப்பினை அமெரிக்கா அறிவிக்கவில்லை.
எனினும், சலுகைத் திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த வரிச் சலுகைத் திட்டம் நிறுத்தப்பட்டதனால் இலங்கைக்கு பாரிய பாதிப்பு கிடையாது என பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது