ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டவர்களை, மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்து விடாத வகையில், உள்ளுராட்சித் தேர்தலில், தமிழ் மக்கள் அக்கறை கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு, உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்பில் தெளிவுட்டல் கருத்தரங்கு நேற்று (29.12.17) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது, அதில் கலந்து கொண்டு உரையாற்றிய சுமந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தி உள்ளார்.
இந்த தெளிவுபடுத்தல் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், நிகழ்வில் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.