Home சினிமாதனுசுக்கு வில்லியா வரலட்சுமி

தனுசுக்கு வில்லியா வரலட்சுமி

by admin

வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் தற்பொழுது நடித்து வரும் நடிகர் தனுஷ் இந்த இரு படங்களையும் முடித்த பின்னர் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி-2 படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு எதிர்வருத் ஜனவரி நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்திற்கு தனுஷிற்கு ஜோடியாக காஜல் அகவர்வால் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவர் அதிக ஊதியம் கோரியதனால் அவர் நீக்கப்பட்டு சாய்பல்லவி ஒப்பநதமாகியுள்ளார்.

இந்தநிலையில் மாரி 2 பத்தில் வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ளாராம். தனுஷ் நடிக்கும் படத்தில் முதல் தடவையாக நடிக்கவுள்ள வரலட்சுமி வில்லான நடிக்கும் மலையாள நடிகர் மாவினோ தோமசுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரி 2 படப்பிடிப்பு நிறைவடைந்ததும் நடிகர் தனுஷ் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More