அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் வாகன பழுது நீக்கும் மையம் ஒன்றில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த இருவர் நேற்று மாலை (29.12.17) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மையத்துக்குள் துப்பாக்கியுடன் திடிரென நுழைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவர்கள் இருவரையும் சரமாரியாக அங்கிருந்து அவர் தப்பிச் சென்றார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஹூஸ்டன் நகர காவற்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட இரு தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தியவரை தேடியபோது அங்குள்ள முற்றத்தில் ஒருவர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. 2 தொழிலாளர்களையும் சுட்டுக் கொன்றவர் அவரே என்பதும், பின் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதும், அதே, வாகன பழுது நீக்கும் மையத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
பலியான மூவர் பற்றிய பெயர் விவரங்களை காவற்துறையினர் உடனடியாக வெளியிடவில்லை. முன்விரோதத்தில் இந்த படுகொலைகள் நடந்திருக்கலாம் என்று ஹூஸ்டன் நகர காவற்துறையினர் சந்தேம் வெளியிட்டுள்ளனர்.