Home இந்தியா குஜராத் மாநிலத்தில் குடோனில் பாரிய தீ விபத்து…

குஜராத் மாநிலத்தில் குடோனில் பாரிய தீ விபத்து…

by admin

குஜராத் மாநிலத்தில் உள்ள குடோனில் இன்று இரவு (உள்ளூர் நேரம் நேற்று)  திடீரென ஏற்பட்ட தீயை அணைக்க 12-க்கு மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் போராடின. குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள ராண்டர் டவுன் பகுதியில் பல்வேறு குடோன்கள் உள்ளன. இந்நிலையில் இன்று இரவு (உள்ளூர் நேரம் நேற்று) இந்த பகுதியில் உள்ள குடோனில் திடீரென தீ பிடித்தது. தீ பரந்து பரவியதால் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் வானை நோக்கி தீப்பிழம்புகள் எழுந்தன. இதனையடுத்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 12-க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள்  விரைந்து சென்றன. கொழுந்து விட்டெரியும் தீயை அணைக்க வீரர்கள் போராடினர். இந்த தீவிபத்தில் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே, நேற்று முன்தினம் மும்பையின் லோவர் பரேலில் கமலா மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More