146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இறுதி நேரத்தில் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுக்கக் கூடும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மாற்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து அரசாங்கம் சட்ட ஆலோசனை பெற்றுக் கொண்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சித் தாவல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love