154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 37 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் இருந்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கடவத்தை ரன்முத்துகல்ல என்னும் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love