குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லங்கா ஈ நியூஸ் ஊடக நிறுனத்தின் கேலிச்சித்திர கலைஞரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன விவகாரம் போன்ற சம்பவங்களை தடுக்க புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக பிரகீத் எக்னெலிகொட காணாமல் போயிருந்தார். கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டவரின் சடலம் கிடைக்காத சந்தர்ப்பத்திலும் சந்தேக நபர்களை தண்டிக்கக்கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
போதியளவு சாட்சியங்கள் இருந்தால் சடலம் இன்றியே சந்தேக நபர்களை தண்டிக்கக்கூடிய வகையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். சில ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலான சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.