166
சிறுபான்மையினர் தனக்கு எதிராக செயற்பட எந்தவித நியாயமும் இல்லையென, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக, சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்ற ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என கூட்டு எதிரணி தெரிவித்து வருகின்றமை குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
தாம் சிறுபான்மையினரைக் காப்பாற்றுவதற்காகவே யுத்தம் செய்ததாகவும், அவர்களுக்கு எதிராக அல்ல எனவும் தெரிவித்த கோத்தாபய தான் ஜனநாயகத்தைக் காப்பதற்காக இராணுவத்தில் 20 வருடங்கள் சேவையாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love