பாகிஸ்தானில் நேற்றையதினம் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கம் தஜிகிஸ்தான்-ஸின்ஜியான் எல்லைப்பகுதியில், 120 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத், பெஷாவர், சுவாட், உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நில நடுக்கம் உணரப்பட்டதாகவும் இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகள் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்; இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது