மதச் சடங்குகள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டியது அவசியமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11ஆவது பீடாதிபதியாக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், அண்மையில் உயிரிழந்ததனையடுத்து அம்மடத்தின் 12ஆவது பீடாதிபதியாக, ஸ்ரீ யமுனாச்சாரியார் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அவரது நியமனத்தை அறிவிக்கும் வகையில், இன்றையதினம் பட்டாபிசேகம் நடைபெறவுள்ளநிலையில், அவரது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடை விதிக்கக் கோரியும் வெங்கடநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கினை நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மதச் சடங்குகள் தொடர்பான வழக்குகளில், நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி பீடாதிபதி நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது