221
KCCC விளையாட்டுக்கழகத்தால் வட மாகாண ரீதியில் நடாத்தப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சனிக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது. பெண்களுக்கான இறுதிப்போட்டியில் KCCC பெண்கள் அணியை எதிர்த்து பமிலியன்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது. இந்தப் போட்டியில் 2புள்ளிகள் வித்தியாசத்தில் பமிலியன்ஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.
ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் சென்றலைட்ஸ் அணியை (யாழ் மத்திய கல்லூரி) எதிர்த்து ஜொலிஸ்ரார் அணி (யாழ் இந்துக் கல்லூரி) மோதியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜொலிஸ்ரார் அணி 50 :53 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியை பெற்று கிண்ணத்தை வென்றது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சென்றலைட் அணியின் கர்சன் தெரிவுசெய்யப்பட்டார். இந்த தொடரின் சிறந்த வீரனாக ஜொலிஸ்ரார் அணியின் கௌரிசங்கர் தெரிவுசெய்யப்பட்டார். வடமாகாணத்தில் கடைசியாக நடைபெற்ற 5 கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டிகளிலும் ஜொலிஸ்ரார் மற்றும் சென்றலைட்ஸ் அணிகளே மோதியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Spread the love