215
இந்திய கிரிக்கெட்அணித்தலைவர் விராட் கோலி நேற்று தனது 60-வது சதத்தை நிறைவு செய்துள்ளார் டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் இதில் அடங்குகின்றன. இந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 இருபதுக்கு 20 போட்டிகள் ஆகியவையும் அடங்கும்.
இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவுசெய்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே, 426 இன்னிங்சில் 60 சதமடித்து சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love