யாழ்ப்பாணத்தில் தமது விவசாய உற்பத்தி பொருட்களை படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.கோவில் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (21.10.18) நடைபெற்ற ஊடகசந்திப்பின் போது பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்வதால் பல்வேறு பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கி வருவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதேமேற்கண்டவாறுதெரிவித்தார்.
அங்குஅவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்கு படையினர் நிதி கோரியிருக்கின்ற போது அதற்கு எவ்வளவு நிதி தேவை என்கின்ற விடயத்தை ஆராய்ந்து அதனை அரசாங்கம் வழங்க முக்வர வேண்டும் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் சொல்லியிருக்கின்றனர்.
படையினர் வசமிருக்கின்ற காணிகளில் எங்கள் மக்கள் தான் வேலை செய்கின்றனர். அங்கு செய்யப்படுகிகின்ற விவசாய உற்பத்திப் பொருட்களை குறிப்பாக மரக்கறிவகைகளை இங்குள்ளசந்தைகளில் விற்பதில்லை. அவர்கள் தங்கள் தேவைகளுக்காகவே அதனைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனாலும் இராணுவத்தினரால் உள்ளுர் வியாபாரிகள் பாதிக்கப்படுவது தொடர்பில் வடக்குமாகாணசபையில் இருந்தபோதே நான் பேசியிருக்கின்றேன். அத்தோடு விவசாய அமைச்சரையும் சந்தித்து அண்மையில் பேசியிருக்கின்றேன். மேலும் படையின் மேற்கொள்ளும் விவசாயத்தையும் பார்த்திருக்கின்றேன்.
ஆனால் அவர்கள் செய்கின்ற உற்பத்திகள் இங்குள்ள சந்தைகளுக்கு வரப் போறதில்லை. அத்தோடு அவர்கள் தொடர்ந்தும் அந்தஉற்பத்திகளைச் செய்யமுடியாது. ஏனெனில் மக்களின் காணிகள் மக்களிடமே கையளிக்கப்பட வேண்டுமென ஐனாதிபதி கூறியிருக்கின்றார்.
அதற்கமையகாணிகளும் விடுவிக்கப்பட இருக்கின்றது. அதுவரையில் அந்தக் காணிகளில் அவர்கள் விவசாயம் செய்தாலும் பறவாயில்லை. ஏனெனில் மக்களிடம் அக் காணிகள் கையளிக்கப்படும் போது அந்தக் காணிகள் வளப்படுத்திய காணிகளாக விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். ஆகவே இதன் பயன் மக்களையே சென்றடைய இருக்கின்றது.
இதேவேளை மருதனார்மடம், திருநெல்வேலி சந்தைகளில் இராணுவத்தினரின் வாகனங்களில் இராணுவச் சீருடையுடன் வந்தே மரக்கறிகளை விற்பனை செய்வதாக ஊடகவியியலாளர்கள் தெரிவித்தபோது அதனை மறுதலித்தஅங்கஐன் இராமநாதன் இதற்கான ஆதாரம் இருந்தால் உடனடியாக அதனைத் தான் தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். இச் சந்திப்பின் முடிவில் இந்தவிடயம் தொடர்பில் மாவட்ட இராணுவத் தளபதியுடனும் தொலைபேசியில் உரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.