மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களை தெளிவுபுடுத்தும் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆய்வுப்பணிகளை டீ.ஜு.பி பயணியர் கப்பலே மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வுக் கப்பல் தனது முதலாவது ஆய்வினை மார்ச் மாதம் 30 முதல் தற்போதுவரை லங்கா பேசின் பகுதிகளான ஜே.எஸ்- 05லிருந்து ஜே.எஸ்-06 பகுதி வரை மேற்கொண்டுள்ளது. இன்று இந்த ஆய்வுக் கப்பல் மன்னார் கடற்பரப்பை அடைந்துள்ளது. இந்த பகுதிகளில் முழுமையான ஆய்வினை மேற்கொள்ள முன்று வாரங்கள் ஆகும்.
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் மூலமாக இந்த ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய மன்னார், காவேரி மற்றும் லங்கா ஆகிய மூன்று பகுதிகளில் இந்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மன்னார் எம்-01 தொடக்கம் எம்-10, காவேரி சீ-1 தொடக்கம் சீ-5, லங்கா ஜே-எஸ்-01 தொடக்கம் ஜே-எஸ் 06 ஆகிய வலயங்கலாக பிரிக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எரிவாயு மற்றும் எரிபொருள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் டோடல் என்ற நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. மேலும் தற்போது ஸ்டலம்பர் என்ற நிறுவனத்துடனும் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய எமக்கு எரிபொருள் ஆய்வு தொடர்பான தகவல்கலை பெற்றுக்கொள்ள முடியும். நாம் 35 வருடங்களுக்கு பிறகு கவேரிப்பகுதியில் தரவுகளை பெற்றுள்ளோம். இதனை ஸ்டலம்பர் நிறுவனம் மேற்கொண்டாலும் அதன் தரவுகள் அனைத்தும் இலங்கை அரசுக்கே சொந்தமானதாகும். இந்த தகவல்களை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு இலாபம் பெறப்படும் எனத் தெரிவித்தார்.