இலங்கை அணியின்இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியினையடுத்து ஓய்வு பெறப் போவதாக தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியினைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளநிலையில் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியு;ன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார் .
இங்கிலாந்துடன்னா டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினால் முத்தையா முரளிதரனின் 100 விக்கெட்டுகள் சாதனையை முறியடிக்கும் நிலை காணப்படுகின்றது. 40 வயதை கடந்துள்ள ஹேரத் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனக்கு ஏற்பட்ட உபாதைகள் காரணமாக 3 டெஸ்ட் தொடர்களில் அவர் முழுமையாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது