ஆண்களின் திருமண வயதைக் குறைக்கக் கோரி பொது நலன் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு உச்சநீதிமன்றம் .25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நலன் வழக்கில இந்தியாவில் ஆண்களின் திருமண வயது 21 என்று உள்ளது. இதனை 18 ஆகக் குறைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தர விட்ட நீதிபதி மேலும் வழக்கைத் தொடர்ந்த வழக்கறிஞர் அசோக் பாண்டேவுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடரப்பட்ட பல வழக்குகளில் நீதிமன்றங்கள் அபராதம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது